முஸ்லிம் பெற்றோர்களே...!! தெரிந்துகொள்ளுங்கள்...!!

No Comments

முஸ்லிம் பெற்றோர்களே...!! தெரிந்துகொள்ளுங்கள்...!!
விழித்திடுக...!! கல்விகட்டணக்கொள்ளையை...!!! வென்றிடுக...!!!
சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களது கல்விக்கட்டணம், தேர்வுகட்டணம் உட்பட அனைத்து விதமான தலைப்புகளிலும் கல்விக்கட்டணங்களை தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறது. மேலும், பள்ளி பராமரிப்பு, ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட பல தலைப்புகளில், நிதி ஒதுக்கீடும் செய்யப்படுவதால் மாணவர்களிடமிருந்து எவ்விதமான தலைப்புகளிலும் கல்விக்கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு
தமிழக அரசு நிர்ணயம் செய்த கல்விக்கட்டணம்
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை
தமிழ் வழி கல்விக்கு எந்த விதமான கட்டணமும் கிடையாது.
ஆங்கில வழி கல்விக்கட்டணம் விவரம்
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புக்கு ரூபாய் 200/- மட்டுமே !
9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புக்கு ரூபாய் 250/- மட்டுமே !
11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புக்கு ரூபாய் 500/- மட்டுமே !
தற்போது 2015 - 2016-ம் கல்வியாண்டு வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில் பெற்றோர்களே... நீங்கள் அனைவரும் விழிப்போடு செயல்படும் நேரம் ஆகும் .
கூடுதல் கல்விக்கட்டணம் வசூல் செய்தால், நீதியரசர் சிங்காரவேலு தனியார் பள்ளி கல்வி கட்டணம் நிர்ணயக்குழு தலைவர் அவர்களுக்கும்,ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிக்கும் உங்கள் புகார் மனுவை பதிவு தபால் மூலம் அனுப்பி வையுங்கள்...
இது நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்ல மிகவும் உதவியாக இருக்கும்...
உங்கள் ஒவ்வொரு முயற்சிக்குப்...
பின்னால் நாங்கள் இருக்கின்றோம்!
கூடுதல் கல்விக்கட்டணத்தை தவீர்ப்பீர்...
கல்வி நிறுவனம் மீது புகார் கொடுப்பீர்...
நீங்கள் புகார் செய்ய விரும்பினால் உங்களுக்கு உதவி செய்ய தொடர்புக்கொள்ளுங்கள்
அகில இந்திய நுகர்வோர் -மனித செயல்பாடுகளுக்கு எதிரான லஞ்சம் ஊழல் மற்றும் குற்றம்
நிறுவனர் மற்றும் தலைவர்
கோ.தேவராஜன்

back to top