Youtube மூலம் ஊடக பணியை தொடங்குவது எப்படி ? பணம் சம்பாதிப்பது எப்படி?

2 comments
முஸ்லிம் இளைஞர்களே ! உங்களிடம் சமுதாய சிந்தனை இருக்கா ? உங்களிடம் பேச்சாற்றல் இருக்கா ? உங்களுக்கு பணம் சம்பாதிக்கனுமா ? அனைத்துக்கும் ஒரே விடை Youtube. ஊடக துறையில் நாம் இல்லை  நாம் இல்லை என்று சொல்லிகொண்டுருந்தால் மட்டும் போதாது அதற்க்கான முயற்சியை தொடங்க வேண்டும். எப்படி? Youtubeகும் ஊடகத்துறைக்கும் என்ன தொடர்பு ? இருக்கு ,இனி எல்லாமே Youtube தான் 

Youtube ஐ நாம் இணையத்தின் டிவி என்று சொல்லலாம். மிகப் பிரபலமான இந்த தளத்தில் கிடைக்காத வீடியோக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வளவு வீடியோக்கள் உள்ளன. ஒரு நிமிடத்தில் சராசரியாக 48 மணிநேர வீடியோ Youtube தளத்தில் Upload செய்யப்படுகிறது. இதை ஒரு டிவி சேனல் என்று வைத்தால் இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்படும் பத்தாவது மிகப் பெரிய சேனல் இது. இவ்வளவு பெரிய தளத்தில் சாதாரணமானவர்களும் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் நம்புவீர்களா? அது தான் உண்மை.  எப்படி என்று பார்ப்போம்.
முதலில் இதற்கு என்ன தேவை என்று சொல்லி விடுகிறேன். 
பேச்சாற்றல் இருக்கவேண்டும் . அவ்வளவு தான். உடன் ஒரு கேமரா இருந்தால் போதும்.
பேச்சாற்றல் இல்லையென்றாலும் பேச்சாற்றல் உள்ளவர்களை வேலைக்கு அமர்த்தி தொடங்குங்கள் .
எப்படி சம்பாதிப்பது
Step – 1
ஒரு கேமரா எடுங்கள், உங்கள் ஊரில் இருக்கும் பெரியவர்களை அல்லது முக்கியமானவர்களை பேட்டி எடுக்க அனுமதி வாங்கி பேட்டிகாணுங்கள் .ஊரில் இருக்கும் பெரியவர்களிடம் உங்கள் ஊரின் வரலாறு மற்றும் பள்ளிவாசல் இமாம் / முத்தவல்லி /ஜமாத்தார்கள் கொண்டு பள்ளிவாசல் கட்டப்பட்ட வரலாறு முதலியவற்றை documentry யாக எடுக்கலாம் .அரசியல் ரீதியாக போனால் ,ஊரு president,  ஊரு பிரச்சனைகள் அது சின்ன பிரச்சனைகளாக இருந்தால் உங்களுக்கு அனுபவத்தை கொடுக்கும் .படி படியாக கட்சி பிரமுகர்கள் / MLA,MP /அதிகாரிகள் ஆகியோர்களை பேட்டிகாணலாம் .
உதாரணமாக :https://www.youtube.com/channel/UCPgSvf862xLLX_flxKalw6A
சின்னதாக ஆரம்பித்த இந்த channel இப்போ ரொம்ப பிரபலம் ...சரி நாமும் தொடங்குவோம் .
Step – 2 
இப்போது எடுத்த வீடியோவை உங்கள் கணினியில் Movie Maker அல்லது sony vegas pro போன்ற வீடியோ எடிட்டிங் மென்பொருளில் போட்டு மெருகேற்ற வேண்டும். ஒன்றும் பெரிய விசயமில்லை, தேவை இல்லாத இடங்களை நீக்க போகிறீர்கள். பின்னணியில் குரல் சேர்க்க வேண்டும் என்றால்  ரெகார்ட் செய்து அதையும் சேருங்கள்.
ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், “வீடியோவை பார்க்கும் படி எடிட் செய்யுங்கள்”
Step – 3 
இப்போது Youtube தளத்துக்கு செல்லுங்கள். உங்கள் ஜிமெயில் கணக்கை கொண்டு நுழைந்து Upload என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் வீடியோவை Upload செய்யுங்கள்.
Step – 4
இப்போது உங்கள் வீடியோ குறித்த தகவல்களை தர வேண்டும். எளிதில் கவரும் வண்ணம் ஆங்கிலத்தில் தலைப்பு வையுங்கள், வீடியோவில் என்ன உள்ளது என Description பகுதியில் சொல்லுங்கள். Tags பகுதில் வீடியோவை தேடுதலுக்கு எளிதாக வார்த்தைகளாக கொடுக்க வேண்டும்.
இப்போது “Public” என்று தெரிவு செய்து Save செய்து விடுங்கள்.
Step – 5 
முதல் நான்கு ஸ்டெப்களை தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள்.
Step – 6 
உங்கள் வீடியோக்களுக்கு நிறைய views வந்தால் அல்லது உங்கள் வீடியோ உங்களுக்கு சொந்தமான வீடியோ என்றால் Youtube உங்களுக்கு கீழே உள்ளது போல ”Invitation to earn revenue from your YouTube videos” என்று  ஒரு மின்னஞ்சல் அனுப்பும்.
அதில் உள்ள லிங்க்கில் சென்று உங்கள் தகவல்களை நீங்கள் தரவேண்டும்.
அந்த லிங்க் - YouTube Partner Program: Interest Form
இப்போது Youtube உங்கள் வீடியோக்களை சோதிக்கும், நிறைய வீடியோக்கள் இருக்க வேண்டும், நிறைய பேர் பார்க்க வேண்டும். இதை தான் Youtube எதிர்பார்க்கும். எல்லாம் சரியாக இருப்பின் உங்களுக்கு Partner என்ற அந்தஸ்து வழங்கப்படும்.
பலருக்கு இது நிராகரிக்கப் படலாம்.மீண்டும் Apply செய்ய இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் வீடியோ upload செய்யாமல் இருக்காதீர்கள். தொடர்ந்து உங்கள் வேலையை செய்யுங்கள். இரண்டு மாதத்துக்கு பின் இன்னும் அதிக Video, Views உடன் மீண்டும் Apply செய்யுங்கள்.
இடையில் உங்களுக்கு Adsense கணக்கு இருந்தால் அதன் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் Youtube வழங்கும். [என் லெவல் இது தான்]. இதில் வீடியோ Upload செய்த உடன் Monetize My Video என்பதை கொடுக்க வேண்டும். இப்போது உங்கள் வீடியோ குறிப்பிட்ட சில நாட்களுக்கு Review செய்யப்படும். வீடியோ உங்களுடையது என்று Youtube உறுதி செய்த உடன், Monetized என்று ஆகி விடும்.
Parter, Adsense இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். Adsense கணக்கு மூலம் வரும் Earning, Partner ஐ விட குறைவாக இருக்கும். [Partner கணக்குக்கு 1000 Views க்கு 2.50$ என்று சொல்லப்படுகிறது]
இதில் Adsense கணக்கை சேர்க்க, நீங்கள் Youtube கணக்கில் நுழைந்த உடன், Youtube இதை கேட்கும். கேட்கவில்லை என்றால் காத்திருக்கவும்.
இரண்டில் எது உங்களுக்கு கிடைத்தாலும், உங்கள் வீடியோவுக்கு Youtube இரண்டு வகையான விளம்பரங்களை காட்டும்
Overlay in-video ads  - வீடியோவின் கீழே வரும் குட்டி விளம்பரம்
TrueView in-stream ads – வீடியோவுக்கு முன் வரும் சில நொடி விளம்பர வீடியோ 
நீங்கள் எவ்வளவு வீடியோ upload செய்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ என்றால் அதற்கேற்ப தான் வருமானமும்.
எந்த மாதிரி வீடியோக்களை Upload செய்யலாம் 
சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், அரசியல் விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தள வீடியோக்கள், பேட்டிகள் , குறும்படங்கள் ,செய்தி துளிகள் , ஊர் செய்திகள் ,விளையாட்டு போட்டிகள் , வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள். போன்றவை.
கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்தால் இன்னும் அதிகமாக வருமானம் பெற முடியும். தமிழும் கூட பயன்படுத்தலாம்.
ஆனால் சினிமா வீடியோ, பாடல் எதையும் நீங்கள் இதில் பயன்படுத்த முடியாது. வீடியோவானது முழுக்க முழுக்க உங்களுடையதாக உங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும் Youtube தரும் Audio swap வசதியை பயன்படுத்தாதீர்கள். அந்த ஆடியோக்களை பயன்படுத்தினால் அதில் வரும் விளம்பரம் மூலம் வரும் வருமானம் உங்களுக்கு வராது.
என்ன தயக்கம் .தொடங்குங்கள் அல்லது மற்றவர்களை தொடங்க ஏவுங்கள் அல்லது பொருளுதவி செய்யுங்கள் .

2 கருத்துகள்

இதற்கு அரசு பதிவு எண் ஏதாவது தேவைப்படுகிறதா அல்லது அப்ளிகேஷன் ஃபார்ம் தேவைப்படுமா நமது டூ-வீலர் ஃபோர் வீலர் இவை அனைத்திலும் மீடியா என்று போட்டுக் கொள்ளலாமா தாங்கள் எனக்கு பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

back to top