முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீட்டில் தனியாக இருக்கும் முஸ்லிம் பெண்கள் கவனத்திற்கு...




* வெளிக்கதவில் கண்டிப்பாக லென்ஸ் பொருத்துங்கள். மரக்கதவுக்கு முன்னால் ஒரு இரும்புக் கதவும் அமையுங்கள்.முடிந்தால் வீட்டை சுட்டி கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள் .நான்கு கேமரா இருக்கும் அல்லது ரெண்டு கேமரா பத்து முதல் இருவது ஆயிரம் செலவு ஆகும் .
* முன் பின் அறிமுகமில்லாதவர் தண்ணீர் கேட்டால், தண்ணீர் எடுப்பதற்காக கதவைத் திறந்து வைத்து விட்டு வீட்டின் உள்ளே செல்லவே கூடாது.
* ஏதேனும் அவசரத்தில் மறந்துபோய் கதவைத் திறந்து வைத்துவிட்டு பக்கத்தில் எங்காவது சென்று வந்தால், வீட்டில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா, யாராவது இருக்கிறார்களா என்று பார்த்த பிறகே கதவை மூட வேண்டும்.
* மின்சார பொருட்களை ரிப்பேர் செய்பவர்கள், கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் என்ற பெயரில் யாராவது, "உங்கள் கணவர் அல்லது மகன் அனுப்பினார்" என்று சொல்லிக் கொண்டு வந்தால், கதவைத் திறக்காமலேயே "பிறகு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பி விடுங்கள்.
* வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு வந்தால் சத்தமாக பேசக் கூடாது. வெளியிடங்களுக்கு செல்லும் போது, புதிய நபர்களிடம் உங்களைப் பற்றிய விவரங்களை சொல்லவே கூடாது.
* எப்போதும் வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் டிரைவர்களின் புகைப்படம், அவர்களின் உறவினர்களின் முகவரியை கைவசம் வைத்திருப்பது நல்லது.சிலவிடுகளில் வேலைசெய்பவர்களே வேவு பார்க்கக்கூடும் .
* வெளியூர் செல்லும்போது, அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் தகவல் தந்துவிட்டு செல்வது ....(ஆனால் இப்போ காவல்துறையே கொள்ளையர்களுக்கு போன் போட்டு சொல்லிடுவார்கள் அதனால் விட்டின் அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்துவிட்டு உங்கள் தொலைபேசி எண்கள் கொடுத்துவிட்டு செல்லவும் . இத்தனையையும் தாண்டி ஒருவேளை திருடர்கள் உள்ளே நுழைந்து விட்டால், சத்தம் கேட்டு உங்களுக்கு தெரிவிக்கலாம் ...ஒருவேளை நீங்கள் இருக்கும்போதே திருடர்கள் உள்ளே நுழைந்து விட்டால்,
அவர்களைப் பார்த்து கூச்சல் போடக் கூடாது.
தனியாக இருக்கும் பெண்கள் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ளலாம். இது அவர்களது பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும்.
அருகே உள்ள காவல்நிலையத்தின் தொலைபேசி எண்களை வைத்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் அவர்கள் நம்மைத் தாக்கலாம். அதனால் மயக்கமாகி விட்டது போல கீழே விழுந்து விட்டு, பின் அவர்கள் கவனம் மாறும்போது வெளியே தப்பி வந்து சத்தம் போடலாம். அவர்களின் பலம் தெரியாமல் அவர்களைத் தாக்க முயற்சிப்பது மிகப் பெரிய தவறு.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Youtube மூலம் ஊடக பணியை தொடங்குவது எப்படி ? பணம் சம்பாதிப்பது எப்படி?

முஸ்லிம் இளைஞர்களே ! உங்களிடம் சமுதாய சிந்தனை இருக்கா ? உங்களிடம் பேச்சாற்றல் இருக்கா ? உங்களுக்கு பணம் சம்பாதிக்கனுமா ? அனைத்துக்கும் ஒரே விடை Youtube. ஊடக துறையில் நாம் இல்லை  நாம் இல்லை என்று சொல்லிகொண்டுருந்தால் மட்டும் போதாது அதற்க்கான முயற்சியை தொடங்க வேண்டும். எப்படி? Youtubeகும் ஊடகத்துறைக்கும் என்ன தொடர்பு ? இருக்கு ,இனி எல்லாமே Youtube தான்  Youtube ஐ நாம் இணையத்தின் டிவி என்று சொல்லலாம். மிகப் பிரபலமான இந்த தளத்தில் கிடைக்காத வீடியோக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வளவு வீடியோக்கள் உள்ளன. ஒரு நிமிடத்தில் சராசரியாக 48 மணிநேர வீடியோ Youtube தளத்தில் Upload செய்யப்படுகிறது. இதை ஒரு டிவி சேனல் என்று வைத்தால் இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்படும் பத்தாவது மிகப் பெரிய சேனல் இது. இவ்வளவு பெரிய தளத்தில் சாதாரணமானவர்களும் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் நம்புவீர்களா? அது தான் உண்மை.  எப்படி என்று பார்ப்போம். முதலில் இதற்கு என்ன தேவை என்று சொல்லி விடுகிறேன்.   பேச்சாற்றல் இருக்கவேண்டும் . அவ்வளவு தான். உடன் ஒரு கேமரா இருந்தால் போதும். பேச்சாற்...

வம்சாவழி சொல்லிதாருங்கள்

முஸ்லிம்களே , உங்களுக்கான சின்ன கேள்வி அரபியர்கள் தங்களது வம்சாவழியை தெரிந்துகொள்ள அவர்களது பெயர்களை மனனம் செய்து சொல்கிறார்கள் சிறுவர்களை அடித்தாவது மனனம் செய்ய சொல்கிறார்கள் .அவர்களது வம்சாவழி பெயர்களை ஒரு புத்தகங்களில் பேணி பாதுகாக்கிறார்கள் . இப்போ உங்களிடம் ஒரு கேள்வி ,உங்களது வம்சாவழி தொடரை சொல்லுங்கள் பார்ப்போம் ... மிஞ்சி மிஞ்சி போனா நான்கு தலைமுறையை நம்பலால்  சொல்ல முடியும் அதற்க்கு மேல் முடியாது ... அந்த நான்கு தலைமுறையையாவது உங்கள் குழந்தைகளை மனனம் செய்ய சொல்ல சொல்லுங்கள் . இன்னார் குடும்பப்பா ? இன்னார் வீடு ? என்று பட்டை பெயர் உண்டு அந்த பட்டை பேரின் விளக்கத்தையும் நம் குடும்ப வரலாறையும் சொல்லி கொடுங்கள் பிள்ளைகளுக்கு ...

ஆதிக்கம் ஓங்க

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இவ்விடத்தில், பிரச்சனைகள் அனைத்துக்குமான தீர்வு இதன் மூலம் உருவாகுமா என்றொரு கேள்வியை நம்மை நோக்கி நாம் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. சாத்தியமற்ற, தேவையில்லாத செயல்பாடுகள் நம் நேரத்தையும் பொருளாதாரத்தையும் வீணாக்குவதோடு மட்டுமல்லாமல், சரியான திசை நோக்கி பயணிப்பதிலிருந்து நம்மை வெகுதூரத்துக்குக் கொண்டு சென்றுவிட்டுவிடும் அபாயமும் அதில் உள்ளது. எனவே, பயணத்தைத் துவக்கும் முன்னரே அது சரியான திசை நோக்கிய பயணம்தானா என்பதை நாம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். "அமைதியான, பயமில்லாத, மகிழ்ச்சியான வாழ்வு" என்பதே ஒவ்வொரு மனிதனின் இவ்வுலகத் தேவையாக இருக்கும். மனிதனின் இத்தேவைக்கு மிகப் பெரும் சவாலாக விளங்குபவை தீய சக்திகள்! இந்தியாவைப் பொறுத்தவரை தீய சக்திகளின் ஆதிக்கம் தலைவிரித்தாடும் சூழலில் வாழ்ந்து வருகிறோம். தீய சக்திகளின் ஆதிக்கம் ஓங்க, ஓங்க மக்களும் அத்தீய சக்திகளின் கட்டுப்பாட்டில் கட்டுண்டு, தாமும் தீயவர்களாக மாறிப்போகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை மக்களுக்கு எதிரான, நாட்டுக்கு எதிரான தீய சக்திகளில் பிரதானமானதான ...