முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆயிரம் ஆண்டு கால குர்ஆன்

#ஆயிரம்_ஆண்டு_கால_குர்ஆன்! #திருச்சியில்_ஒரு_வரலாற்று_ஆவணம்! .......................................... மு.தமிமுன் அன்சாரி .......................................... அரபு மண்ணில் உதித்த இஸ்லாம், இந்தியாவுக்கு முதலில் தென்னிந்தியாவின் வழியாகவே நுழைந்தது. DISCOVERY OF INDIA என்ற நூலில் ஜவஹர்லால் நேரு அவர்களும் இதை குறிப்பிட்டிருக்கிறார். கேரள மற்றும் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் வணிகம் செய்து வந்த அரபுகளின் வழியாகவே இஸ்லாம் இந்திய மண்ணுக்கு அறிமுகம் ஆகியது. வட இந்தியாவுக்கு வரும் முன்பே தென்னிந்தியாவுக்கே இஸ்லாம் முதலில் வந்தது. கேரளாவின் கொடுங்கலூரில்தான் இந்தியாவின் முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டது. சேரமான் பெருமான் என்ற சேர மன்னன் தன்னை தாஜுதீன் என பெயர் மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை தழுவினார். அவர் மெக்காவுக்கு சென்று திரும்பும் வழியில் இன்றைய ஓமானில் உள்ள 'சலாலா ' என்ற மலையடிவாரத்தில் உயிர் நீத்தார். அங்கு அவரது வரலாறும், கல்லறையும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த மன்னரின் உத்தரவின் பேரிலேயே கேரளாவின் கொடுங்கல்லூரில் முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டது. மாலிக் பின் தீனார் ...