முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முஸ்லிம் பெற்றோர்களே...!! தெரிந்துகொள்ளுங்கள்...!!


முஸ்லிம் பெற்றோர்களே...!! தெரிந்துகொள்ளுங்கள்...!!
விழித்திடுக...!! கல்விகட்டணக்கொள்ளையை...!!! வென்றிடுக...!!!
சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களது கல்விக்கட்டணம், தேர்வுகட்டணம் உட்பட அனைத்து விதமான தலைப்புகளிலும் கல்விக்கட்டணங்களை தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறது. மேலும், பள்ளி பராமரிப்பு, ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட பல தலைப்புகளில், நிதி ஒதுக்கீடும் செய்யப்படுவதால் மாணவர்களிடமிருந்து எவ்விதமான தலைப்புகளிலும் கல்விக்கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு
தமிழக அரசு நிர்ணயம் செய்த கல்விக்கட்டணம்
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை
தமிழ் வழி கல்விக்கு எந்த விதமான கட்டணமும் கிடையாது.
ஆங்கில வழி கல்விக்கட்டணம் விவரம்
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புக்கு ரூபாய் 200/- மட்டுமே !
9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புக்கு ரூபாய் 250/- மட்டுமே !
11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புக்கு ரூபாய் 500/- மட்டுமே !
தற்போது 2015 - 2016-ம் கல்வியாண்டு வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில் பெற்றோர்களே... நீங்கள் அனைவரும் விழிப்போடு செயல்படும் நேரம் ஆகும் .
கூடுதல் கல்விக்கட்டணம் வசூல் செய்தால், நீதியரசர் சிங்காரவேலு தனியார் பள்ளி கல்வி கட்டணம் நிர்ணயக்குழு தலைவர் அவர்களுக்கும்,ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிக்கும் உங்கள் புகார் மனுவை பதிவு தபால் மூலம் அனுப்பி வையுங்கள்...
இது நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்ல மிகவும் உதவியாக இருக்கும்...
உங்கள் ஒவ்வொரு முயற்சிக்குப்...
பின்னால் நாங்கள் இருக்கின்றோம்!
கூடுதல் கல்விக்கட்டணத்தை தவீர்ப்பீர்...
கல்வி நிறுவனம் மீது புகார் கொடுப்பீர்...
நீங்கள் புகார் செய்ய விரும்பினால் உங்களுக்கு உதவி செய்ய தொடர்புக்கொள்ளுங்கள்
அகில இந்திய நுகர்வோர் -மனித செயல்பாடுகளுக்கு எதிரான லஞ்சம் ஊழல் மற்றும் குற்றம்
நிறுவனர் மற்றும் தலைவர்
கோ.தேவராஜன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Youtube மூலம் ஊடக பணியை தொடங்குவது எப்படி ? பணம் சம்பாதிப்பது எப்படி?

முஸ்லிம் இளைஞர்களே ! உங்களிடம் சமுதாய சிந்தனை இருக்கா ? உங்களிடம் பேச்சாற்றல் இருக்கா ? உங்களுக்கு பணம் சம்பாதிக்கனுமா ? அனைத்துக்கும் ஒரே விடை Youtube. ஊடக துறையில் நாம் இல்லை  நாம் இல்லை என்று சொல்லிகொண்டுருந்தால் மட்டும் போதாது அதற்க்கான முயற்சியை தொடங்க வேண்டும். எப்படி? Youtubeகும் ஊடகத்துறைக்கும் என்ன தொடர்பு ? இருக்கு ,இனி எல்லாமே Youtube தான்  Youtube ஐ நாம் இணையத்தின் டிவி என்று சொல்லலாம். மிகப் பிரபலமான இந்த தளத்தில் கிடைக்காத வீடியோக்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வளவு வீடியோக்கள் உள்ளன. ஒரு நிமிடத்தில் சராசரியாக 48 மணிநேர வீடியோ Youtube தளத்தில் Upload செய்யப்படுகிறது. இதை ஒரு டிவி சேனல் என்று வைத்தால் இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்படும் பத்தாவது மிகப் பெரிய சேனல் இது. இவ்வளவு பெரிய தளத்தில் சாதாரணமானவர்களும் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் நம்புவீர்களா? அது தான் உண்மை.  எப்படி என்று பார்ப்போம். முதலில் இதற்கு என்ன தேவை என்று சொல்லி விடுகிறேன்.   பேச்சாற்றல் இருக்கவேண்டும் . அவ்வளவு தான். உடன் ஒரு கேமரா இருந்தால் போதும். பேச்சாற்...

வம்சாவழி சொல்லிதாருங்கள்

முஸ்லிம்களே , உங்களுக்கான சின்ன கேள்வி அரபியர்கள் தங்களது வம்சாவழியை தெரிந்துகொள்ள அவர்களது பெயர்களை மனனம் செய்து சொல்கிறார்கள் சிறுவர்களை அடித்தாவது மனனம் செய்ய சொல்கிறார்கள் .அவர்களது வம்சாவழி பெயர்களை ஒரு புத்தகங்களில் பேணி பாதுகாக்கிறார்கள் . இப்போ உங்களிடம் ஒரு கேள்வி ,உங்களது வம்சாவழி தொடரை சொல்லுங்கள் பார்ப்போம் ... மிஞ்சி மிஞ்சி போனா நான்கு தலைமுறையை நம்பலால்  சொல்ல முடியும் அதற்க்கு மேல் முடியாது ... அந்த நான்கு தலைமுறையையாவது உங்கள் குழந்தைகளை மனனம் செய்ய சொல்ல சொல்லுங்கள் . இன்னார் குடும்பப்பா ? இன்னார் வீடு ? என்று பட்டை பெயர் உண்டு அந்த பட்டை பேரின் விளக்கத்தையும் நம் குடும்ப வரலாறையும் சொல்லி கொடுங்கள் பிள்ளைகளுக்கு ...

ஆதிக்கம் ஓங்க

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இவ்விடத்தில், பிரச்சனைகள் அனைத்துக்குமான தீர்வு இதன் மூலம் உருவாகுமா என்றொரு கேள்வியை நம்மை நோக்கி நாம் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. சாத்தியமற்ற, தேவையில்லாத செயல்பாடுகள் நம் நேரத்தையும் பொருளாதாரத்தையும் வீணாக்குவதோடு மட்டுமல்லாமல், சரியான திசை நோக்கி பயணிப்பதிலிருந்து நம்மை வெகுதூரத்துக்குக் கொண்டு சென்றுவிட்டுவிடும் அபாயமும் அதில் உள்ளது. எனவே, பயணத்தைத் துவக்கும் முன்னரே அது சரியான திசை நோக்கிய பயணம்தானா என்பதை நாம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். "அமைதியான, பயமில்லாத, மகிழ்ச்சியான வாழ்வு" என்பதே ஒவ்வொரு மனிதனின் இவ்வுலகத் தேவையாக இருக்கும். மனிதனின் இத்தேவைக்கு மிகப் பெரும் சவாலாக விளங்குபவை தீய சக்திகள்! இந்தியாவைப் பொறுத்தவரை தீய சக்திகளின் ஆதிக்கம் தலைவிரித்தாடும் சூழலில் வாழ்ந்து வருகிறோம். தீய சக்திகளின் ஆதிக்கம் ஓங்க, ஓங்க மக்களும் அத்தீய சக்திகளின் கட்டுப்பாட்டில் கட்டுண்டு, தாமும் தீயவர்களாக மாறிப்போகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை மக்களுக்கு எதிரான, நாட்டுக்கு எதிரான தீய சக்திகளில் பிரதானமானதான ...