முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வம்சாவழி சொல்லிதாருங்கள்

முஸ்லிம்களே , உங்களுக்கான சின்ன கேள்வி அரபியர்கள் தங்களது வம்சாவழியை தெரிந்துகொள்ள அவர்களது பெயர்களை மனனம் செய்து சொல்கிறார்கள் சிறுவர்களை அடித்தாவது மனனம் செய்ய சொல்கிறார்கள் .அவர்களது வம்சாவழி பெயர்களை ஒரு புத்தகங்களில் பேணி பாதுகாக்கிறார்கள் . இப்போ உங்களிடம் ஒரு கேள்வி ,உங்களது வம்சாவழி தொடரை சொல்லுங்கள் பார்ப்போம் ... மிஞ்சி மிஞ்சி போனா நான்கு தலைமுறையை நம்பலால்  சொல்ல முடியும் அதற்க்கு மேல் முடியாது ... அந்த நான்கு தலைமுறையையாவது உங்கள் குழந்தைகளை மனனம் செய்ய சொல்ல சொல்லுங்கள் . இன்னார் குடும்பப்பா ? இன்னார் வீடு ? என்று பட்டை பெயர் உண்டு அந்த பட்டை பேரின் விளக்கத்தையும் நம் குடும்ப வரலாறையும் சொல்லி கொடுங்கள் பிள்ளைகளுக்கு ...

முஸ்லிம் பெற்றோர்களே...!! தெரிந்துகொள்ளுங்கள்...!!

முஸ்லிம் பெற்றோர்களே...!! தெரிந்துகொள்ளுங்கள்...!! விழித்திடுக...!! கல்விகட்டணக்கொள்ளையை...!!! வென்றிடுக...!!! சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களது கல்விக்கட்டணம், தேர்வுகட்டணம் உட்பட அனைத்து விதமான தலைப்புகளிலும் கல்விக்கட்டணங்களை தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறது. மேலும், பள்ளி பராமரிப்பு, ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட பல தலைப்புகளில், நிதி ஒதுக்கீடும் செய்யப்படுவதால் மாணவர்களிடமிருந்து எவ்விதமான தலைப்புகளிலும் கல்விக்கட்டணம் வச ூலிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயம் செய்த கல்விக்கட்டணம் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழி கல்விக்கு எந்த விதமான கட்டணமும் கிடையாது. ஆங்கில வழி கல்விக்கட்டணம் விவரம் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புக்கு ரூபாய் 200/- மட்டுமே ! 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புக்கு ரூபாய் 250/- மட்டுமே ! 11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புக்கு ரூபாய் 500/- மட்டுமே ! தற்போது 2015 - 2016-ம் கல்வியாண்டு வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில் பெற்றோ...

முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பிற்கு

முஸ்லிம் பெண்கள் கல்லூரிக்கு போக வர பாதுகாப்பான முறையில் செல்கிறார்களா என்று தெரிந்துகொள்ள Android போன் களில் நமக்கு கிடைத்த சாப்ட்வேர் தான் இந்த life360 அவர்களுடன் கலந்துரையாட முடியும் குடும்பத்தில் உள்ள மட்ட்ரவர்களை நான் ஆபத்தில் இருக்கிறேன் என்று எச்சரிக்கை செய்ய முடியும் .இனிமேல் கவலை இல்லைங்க வைத்துல நெருப்ப கட்டிக்கிட்டு இருக்க வேண்டாம் .

இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் அவசியம்.நீங்களும் படிங்க .....

இது யாருக்கு தேவையோ தெரியாது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் அவசியம்.நீங்களும் படிங்க ..... நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன? 1. உங்கள் கைதுக்கான காரணங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். 2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நீங்கள் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு 3. உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு 4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும் 5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும் விலங்கிடலாமா? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது. கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல் கைது செய்ய...

ஆதிக்கம் ஓங்க

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இவ்விடத்தில், பிரச்சனைகள் அனைத்துக்குமான தீர்வு இதன் மூலம் உருவாகுமா என்றொரு கேள்வியை நம்மை நோக்கி நாம் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. சாத்தியமற்ற, தேவையில்லாத செயல்பாடுகள் நம் நேரத்தையும் பொருளாதாரத்தையும் வீணாக்குவதோடு மட்டுமல்லாமல், சரியான திசை நோக்கி பயணிப்பதிலிருந்து நம்மை வெகுதூரத்துக்குக் கொண்டு சென்றுவிட்டுவிடும் அபாயமும் அதில் உள்ளது. எனவே, பயணத்தைத் துவக்கும் முன்னரே அது சரியான திசை நோக்கிய பயணம்தானா என்பதை நாம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். "அமைதியான, பயமில்லாத, மகிழ்ச்சியான வாழ்வு" என்பதே ஒவ்வொரு மனிதனின் இவ்வுலகத் தேவையாக இருக்கும். மனிதனின் இத்தேவைக்கு மிகப் பெரும் சவாலாக விளங்குபவை தீய சக்திகள்! இந்தியாவைப் பொறுத்தவரை தீய சக்திகளின் ஆதிக்கம் தலைவிரித்தாடும் சூழலில் வாழ்ந்து வருகிறோம். தீய சக்திகளின் ஆதிக்கம் ஓங்க, ஓங்க மக்களும் அத்தீய சக்திகளின் கட்டுப்பாட்டில் கட்டுண்டு, தாமும் தீயவர்களாக மாறிப்போகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை மக்களுக்கு எதிரான, நாட்டுக்கு எதிரான தீய சக்திகளில் பிரதானமானதான ...

கூடங்குளம் அணுஉலை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? - ஒரு நடுநிலைப் பார்வை

1. அணுஉலை என்றால் என்ன? அணு மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது? உலகெங்கும் மின்சாரம் என்பது ஒரே ஒரு முறையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.  ஏறக்குறைய நமது மிதி வண்டி(dynamo) ‘டைனமோ’வில் பயன்படுத்தப்படும் மின் காந்தப் புலம் தொழில் நுட்பம் தான்.  இது போன்ற பெரிய டைனமோக்களை சுற்றுவதன் மூலம் மட்டுமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.  அணையில் நீரைத் தேக்கி மேலிருந்து கீழே வரும் நீரின் விசையால் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது நீர் மின்சாரம்.  காற்றின் மூலம் சுற்றச் செய்து தயாரிக்கப்படுவது காற்றாலை மின்சாரம்.  நீரைக் கொதிக்க வைத்து, நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது அனல் மின்சாரம்.  (இதற்கு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது).  டீசல், பெட்ரோல், எரிவாயு மூலமும் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.  இவ்வாறு நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்குவதற்கு நிலக்கரிக்குப் பதிலாக அணுவின் உட்கருவைப் பிளப்பதால் உருவாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதுதான் அணு மின்சாரம்.